முதல் தாய் - குடும்பம்
தாய் மடி தலை தாங்க
தந்தை மடி கால் தாங்க
தொலைக்காட்சி ரசித்தவனாய் தங்கையுடன் சண்டையிட வேண்டும்
நான்கு நாட்கள் இடைவிடாது
உடல் பேச்சை கேட்காமல் மனப் பேச்சைக் கேட்டு
அன்னையின் மீன் குழம்பும் கறிக் குழம்புமாய் உண்டு உறங்க வேண்டும்
இரண்டாம் தாய் - மனையாள்
ஆளுள்ள அரவமில்லா மேற்கு தொடர்ச்சி மலையில் மலையாள கரையில்
கண்ணாடி பேழையாய் ஒரு வீடு
அந்தி மாலை நேரத்தில் அடை மழையில்
என்னவள் நீராடி பனியில் நனைந்த பதுமையாய்
மழை நீர் கண்ணாடியுடன் உறவாடும் விழையாட்டை ரசித்தவளாய் மதி மயங்கி இருக்க
வீடு திரும்பிய நான் புது மலர் கண்ட வண்டாக சிறகடித்து
என்னவளை மார் சாய்த்து உச்சி நுகர்ந்து முத்தமிட்டு
ஒரு கோப்பை தேநீருக்கு நான்கு இதழ்கள் விளையாட வேண்டும்
உடை மாற்றி ஒரு குடைக்குள் ஈருயிராய்
நான் அவளது தோள் சேர்த்து அனைத்தபடி
அவள் எனது இடை பற்றி தோள் சாய்ந்தபடி
கால் நனைய காலாற நடை பழக வேண்டும்
ஊர் கூடிய திருவிழாவில் கைகோர்த்து நடக்க
'என்னே பொருத்தம்' என காதுபட கூறக் கேட்க வேண்டும்
மனையாள் பிறந்த வீடு செல்ல
ஒலி பெருக்கியையும் மிஞ்சும் சத்தத்தில் மனதில் பதிந்த பாடல்களை
வாய்விட்டு பாடியபடி சமையல் புரிய வேண்டும் - அத்தருணம்
வீடு புகுந்தவள் எனைப்பார்த்து சுவர் சாய்ந்து புன் முறுவல் புரிந்திட வேண்டும்
சிறு சண்டைக்கு பின்,
ஒரு திங்கள் பிரதேசம் சென்று பாலைவனமாய் வீடு திரும்ப
மேசை விரிப்பால் பொருள் யாவும் சரிக்க
பாலைவனத்தில் அடைமழை பொழிய
வள்ளுவன் கண்ட ஊடலுக்கு-பின்-கூடலின் மகிமையை ஆராய வேண்டும்
விடிய விடிய படுக்கை அறை சளைக்கும் வரை கதை பேச வேண்டும்
மூன்றாம் தாய் - நட்பு
கல்லுரி வாசலில் மீண்டும் கால் பதிக்க வேண்டும்
உள்ளூர் அழகிகளைய்ப் பற்றி
விடுதி விளக்கு அணையும் வரை விதண்டாவாதம் பேச வேண்டும்
சனி ஞாயிறு கிழமைகளில்
ஒவ்வொரு குருவி கூடு அறைக்கும் சென்று நலம் விசாரிக்க வேண்டும்
அரை நிர்வான அழகி கணினியில் ஜொலிக்க
தரையில் அமர்ந்து சீட்டாடியபடி புறம் பேச வேண்டும்
ஒரு பெண்ணாலும் இம்மூடனாலும்
இழந்த இரு நட்புகளை இழந்திருக்காதிருக்க வேண்டும்
பாலிய சிநேகிதனே பறி கொடுக்காமல் இருந்திருக்க வேண்டும்
( இன்னும் பதிவுகள் சேர்க்கப்படும் )
No comments:
Post a Comment